கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா – தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்..!!
தேனீ மாவட்டம் வீரபாண்டிய புரத்தை சேர்ந்த கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை தொடங்கியது. இன்று தொடங்கி மே 16ம் தேதி வரை நடைபெறும்.
திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக 148 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு முறை 4163 பக்தர்கள் தரிசனம் செய்ய கோவிலுக்கு வருகின்றனர். ஒரு நாளுக்கு மட்டும் ஒரு லட்சம் பக்தர்கள் வருவதாக கோவில் அலுவலகர் தெரிவித்துள்ளார்.

ஆண்டிபட்டி, தேனீ, பெரியகுளம் பகுதி வழியாக வரும் பேருந்துகளை வீரபாண்டி வடக்கு பேருந்து நிறுத்தத்தில், பேருந்துகளை நிறுத்தவும். கேரளாவில் இருந்து வரும் பேருந்துகள் மேற்கு பகுதி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
தேனீயில் இருந்து உத்தமபாளையம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும், மாற்று பாதை வழியாக , திருப்பி விடப் பட்டுள்ளது. என போக்குவரத்து மாற்றம் எஸ்.பி. பிரவின் உமேஷ் கூறினார்.
அதே போல் சின்னமனூரில் இருந்து வெளியூர் களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும், உப்பார் பட்டி செக் போஸ்ட்டில் இருந்து தப்புகுண்டு, தாடிச்சேரி வழியாக மாற்றிவிடப் பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் மே 16ம் தேதி வரை மட்டும், இருக்கும் என்றார் எஸ்.பி. பிரவின் உமேஷ்.
வெ.லோகேஸ்வரி
Discussion about this post