இந்தியாவுடன் பாகிஸ்தான் போரை தொடங்கியிருப்பது உள்நாட்டில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அந்த நாட்டு நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் எம்.பி ஒருவர் அந்த நாட்டு பிரதமரை கோழை என்று வறுத்து எடுத்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், ‘இக்கட்டான சூழலில்தான் ஒரு நாட்டு தலைவரின் தலைமை பண்பு வெளியே வரும். ஒரு ராணுவத்தை ஒரு சிங்கம் வழிநடத்தும் போது, அது போரிடும். இங்கு, பிணந்திண்ணி கழுகு வழிநடத்துகிறது. இந்த ராணுவத்தால் எப்படி போரிட முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அவர் பேசுகையில், பாகிஸ்தான் முழுமைக்கும் இந்தியா தாக்கி வருகிறது. இந்த நாட்டு பிரதமர் ஒரு கோழையாக இருக்கிறார். இந்திய பிரதமரின் பெயரை குறிப்பிடக் கூட அவர் பயப்படுகிறார். இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து 20 கி.மீ தொலைவு வரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆஷிம் முனீர் எங்கே இருக்கிறார்?’ என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.