கல்லீரலின் இயக்கத்தை சீராக்கும் பாத ஹஸ்தாசனம்..!
இந்த ஆசனத்தில் கால்களையும், கைகளையும் ஒன்றாக இருக்கும் படி செய்வதால் இதற்கு பாதஹஸ்தாசனம் என்று அழைக்கப்படுகிறது. விரிப்பின் மீது கால்களை சேர்த்து வைக்கவும். கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து தலைக்குமேல் காதுகளை ஒட்டியவாறு கைகளை மடிக்காமல் மேலே நீட்டவும்.
வயிற்றுப்பகுதி, முதுகு, எலும்பு, கால்களை..
கீழே குனியும்போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு.
உடம்பின் பின்புறம் உள்ள எல்லாத் தசைகள், இடுப்பு நரம்பு தொடையில் உள்ள எலும்பை பிணைக்கும் தசை னார்கள், தசையை பிணைக்கும் தசை நார்கள், கால்கள் ஆகியவை நன்றாக நீட்டப் படுகின்றன. முதுகுத்தண்டு மற்றும் இடுப்பில் உள்ள நரம்புகள் முறுக்கேறுகின்றன. தலைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
ஜீரண சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன . உடலின் சுற்றளவை நன்கு குறைக்கிறது . இடுப்பு மற்றும் இடுப்புக்கு கீழ் உள்ள அதிக சதைப் பகுதியை மெலிய வைக்கிறது.
ஜீரண சம்பந்தமான இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்லது. நீரிழிவு நோய் சிகிச்சையில் பலன் அளிக்கிறது. கல்லீரலின் இயக்கம் சீராகிறது.
உடல் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. தலைக்கு இரத்தம் பாய்வது உணரப் படுகிறது.
அதிக இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள், கழுத்து வலி, இடுப்புபிடிப்பு உள்ளவர்கள். இதைச் செய்தல் கூடாது.
– வீர பெருமாள் வீர விநாயகம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..