திரைப்பட இயக்குனர் சூர்யபிரகாஷ் காலமானார்..! வேதனையில் திரை உலகினர்..!!
கடந்த 1996ம் ஆண்டு ராஜ் கிரண், வனிதா நடிப்பில் வெளியான மாணிக்கம் படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் “சூர்யபிரகாஷ்“. மாணிக்கம் படத்தை தொடர்ந்து சரத்குமார் நடித்த மாயி, திவான் போன்ற படங்களையும், ஜீவன் நடித்த அதிபர் படத்தையும் இவர் இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கியுள்ள வருஷநாடு என்ற படம் திரையில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த துயர செய்தியை அறிந்த நடிகர் சரத்குமார் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ், இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..