எங்க பாட்டி சொன்ன வைத்தியம்..! இந்த நோய்க்கு இது தான் தீர்வு..!
ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு வயதானவர் இருக்க வேண்டும் என சொல்லுவாங்க. ஏன் தெரியுமா அப்படி இருந்தா நமக்கும் ஏற்படும் சிறு காயம் முதல் உடல் நோய்கள் வரை அதை குணமாக்க மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருக்காது…
நான் ஏன் சொல்லுறன்னு நீங்களே படிச்சு பாருங்க..
1) சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.
2) வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்…
3) பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
4) தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.
5) கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.
6) தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.
7) கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.
– வீர பெருமாள் வீர விநாயகம்.