பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனின் மகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி 43 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து வரும் 10 ஆம் தேதி இந்திய மகளிர் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் போட்டி முடிந்தபிறகு இந்திய மகளிர் அணியினர் பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பிஸ்மா மரூபின் 7 மாத குழந்தையை சந்திக்க சென்றனர். அங்கு பிஸ்மாவின் குழந்தை ஃபாத்திமாவுடன் இந்திய வீராங்கனைகள் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் தனது ட் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.