நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மருத்துவமனையில் மீண்டும் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. முக கவசம் அணியுங்கள். தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
அத்துடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அதில் இருந்து குணமடைந்த அவர், தற்போது மீண்டும் காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக, மருத்துவமனையில் சேர்ந்துவிட்டேன். உங்களுடன் நேரம் செலவழிக்க, ஊக்கமளிக்கும் மருத்துவர்கள் இருந்தால், மருத்துவமனை அனுபவம் மோசமாக இருக்காது’ என கூறினார். இதனுடன், மருத்துவர் பிரித்திகா சாரியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.