சோள மாவு சப்பாத்தி இன்னிக்கு செய்ங்க…!
சோள மாவு 1 1/2 கப்
தண்ணீர் 2 கப்
உப்பு தேவையானது
நெய் தேவையானது
ஒரு வாணலில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
பின் அதில் சோள மாவு சேர்த்து கலந்து தண்ணீர் வற்றும் வரை வேகவைத்து பின் அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.
அடுத்தது மாவை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
பின் சப்பாத்தி தேய்த்துக் கொள்ளவும்.
அடுப்பில் கல்லை வைத்து சூடு செய்து சப்பாத்தி போட்டு வேகவைத்து,திருப்பிப்போட்டு மறுபக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
சப்பாத்தி தயார் ஆனதும் இரண்டு பக்கமும் நெய் விட்டு பிறகு சாப்பிடலாம்.
