அட இந்த வாக்குறுதி நல்லா இருக்கே..!! தெலுங்கானா மக்களுக்கு ஓர் குட் நியூஸ்..!!
தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் என சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி 115 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.
அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரசேகரராவ் ஐதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கு கட்சி சின்னத்துக்கான படிவத்தை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, பிஆர்எஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் பேசிய அவர், வறுமை கோட்டுக்குகீழ் உள்ள வெள்ளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேசிஆர் காப்பீடு பெயரில் எல்.ஐ.சி மூலம் 5 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தார்.
மூத்த குடிமக்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் வரை உயர்த்தப்படும் என்றும் தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் 3 ஆயிரம் வழங்கப்படும் எனவும் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..