முடிவை மாற்றி கொண்ட ஒய்.எஸ்.சர்மிளா..!! தேர்தல் களத்தில் யாருக்கு பாதிப்பு..?
காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருவதால தெலங்கானாவில் 119 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக ஒய்.எஸ்.ஆர். தெலங்கான கட்சி தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சியிடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆந்திராவின் முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் காங்கிரஸிடமிருந்து கூட்டணி குறித்து முறையான அழைப்பு வராத நிலையில் தனித்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெலங்கானாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் இருக்க காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செல்லவுள்ளதாக தெரிவித்தார்.
ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி மொத்தமுள்ள 119 தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..