அட இந்த திட்டம் சூப்பரா இருக்கே..!!
நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்கள் குறித்து புகைப்படத்துடன் “நம்ம சாலை செயலியில்” பதிவேற்றம் செய்யப்பட்டால் 72 மணி நேரத்திற்குள் சரி செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்கள் குறித்து புகைப்படத்துடன் புகார் அளிக்க ஏதுவாக தமிழக நெடுஞ்சாலை துறை சார்பாக நம்ம சாலை செயலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐபோனில் ஒட்டுக்கேட்பு குறித்து தனக்கு குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை என்றும், ஐபோன் பயன்படுத்துவோர் பாதுகாப்பாக பயன்படுத்துங்கள் எனவும் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு விளையாட்டுத்துறை உலகமே வியக்கும் வண்ணம் மாறியுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் மேலூர் திருப்பத்தூர், தஞ்சை மன்னார்குடி, விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை இருவழி சாலைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..