சிக்கிய அரசு அதிகாரி..!! கைது செய்ய காரணம்..?
மயிலாடுதுறை மாவட்டத்தில், பட்டா விண்ணப்பம் பரிந்துரை செய்ய 2 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி நாகலெட்சுமி, பட்டா கேட்டு பொறையாறு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
அதனை பரிந்துரை செய்ய பொறுப்பு விஏஓ. பாண்டியராஜ் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் ரசாயனம் தடவிய 2 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை விஏஒ பாண்டியராஜ் பெற்ற போது மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..