பரபரப்பான அரக்கோணம்..! மின்விளக்கால் நேர்ந்த சோகம்..!!
ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே 60 அடி உயரத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உயர் கோபுர மின்விளக்கில் இருந்து திடீரென ஒரு விளக்கு இன்று அறுந்து அவ்வழியே சென்ற பெண்ணின் கால் மீது விழுந்ததால் காயம் ஏற்பட்டது. இதற்கு நகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அங்கிருந்த பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் மீதமுள்ள விளக்குகளும் எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
இந்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.