சீரக மசாலா சோடா பானம்..!
தேவையான பொருட்கள்:
சர்க்கரை 1 கப்
மிளகுபொடி 2 ஸ்பூன்
சீரகப்பொடி அரை ஸ்பூன்
உப்பு 1 ஸ்பூன்
சாட் மசாலா 1 ஸ்பூன்
தண்ணீர் 1 1/2 கப்
சோடா
எலுமிச்சை பழம் 1
செய்முறை:
ஒரு வாணலில் சர்க்கரை மிளகுப்பொடி,சீரகத்தூள்,உப்பு,சாட் மசாலா சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து பின் அதில் நீரை ஊற்றி 15 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.
இப்போ சிரப் தயார், இதனை ஒரு கண்ணாடி பாட்டலில் ஊற்றி வைத்து ஃபிரிஜ்ஜில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
சீரக மசாலா சோடா தயாரிக்க ஒரு டம்ளரில் தேவையான அளவு சீரக சிரப்பை சேர்த்து அதில் ஐஸ்கட்டியை போட்டு, எலுமிச்சை சாறு சேர்த்து சோடா தண்ணீரை ஊற்றி கலக்கினால் சீரக மசாலா சோடா தயார்.