குளிர்ச்சியான சாக்லேட் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
பால் 1 லிட்டர்
சோள மாவு கரைசல்
கோகோ பவுடர் 3 ஸ்பூன்
சர்க்கரை 4 ஸ்பூன்
வெனிலா எசென்ஸ் 1/2 ஸ்பூன்
சாக்லேட் 100 கிராம்.
செய்முறை:
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் கோகோ பவுடர் மற்றும் சிறிது பால் சேர்த்து நன்றாக கலந்து தனியே வைக்கவும்.
கொதித்த பாலில் சோளமாவு கரைசலை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும்.
பின் அதில் கோகோ பவுடர் கரைசலை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
பின் அதில் சர்க்கரை மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து கிளறவும்.
பின் சாக்லேட் சேர்த்து கைவிடாமல் 10 நிமிடங்களுக்கு கிளற வேண்டும்.
பின் அடுப்பை அணைத்து அப்படியே ஆறவைக்க வேண்டும்.
ஒரு டம்ளரில் ஐஸ்கட்டி சேர்த்து தயாரித்த கலவையை ஊற்றி அதன் மேல் துருவிய சாக்லேட் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.