“மைக்கில் சாவல் விடலாமே தவிர வேறு எவரும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது..” வைகோ பேச்சு..!!
திராவிட கட்சிகளை தவிர தமிழ்நாட்டை வேற யாராலும் கைப்பற்றி ஆட்சி செய்ய முடியாது… மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு ஓர வஞ்சனையாக செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு…
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க கோரியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்…
வைகோ மேடைப் பேச்சு :
தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது… முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்…
திராவிட இயக்கங்கள் தவிர வேறு எவரும் தமிழ்நாட்டை கைப்பற்ற முடியாது… மைக்கில் சாவல் விடலாமே தவிர வேறு எவரும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது..
மத்திய அரசு ஓரவஞ்சனை :
37500 கோடி முதலமைச்சர் கேட்டார் ஆனால் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை…மத்திய அரசு ஓர வஞ்சனையக செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்…
மேகதாது அணை கட்ட நாம் ஒருபோதும் விட்டு விட கூடாது… அணை கட்டிவிட்டால் ராணுவத்தை வைத்து கூட அவர்கள் பாதுகப்பர்கள்,எனவே அணை கட்டுவதற்கு நாம் அனுமதிக்க கூடாது…
செபி நிறுவனம் :
செபி நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நியாம் கிடைக்க வேண்டும்… 40 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரை பறித்த நீட் நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என கூறினார்…
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழக குமார்,சுப்பிரமணி,டி.சி.ராஜேந்திரன்,பகுதி செயலாளர்கள் நாசர், தென்றல் நிசார்,மற்றும் நிர்வாகிகள் மகளிர் அணியினர் பலர் கலந்துகொண்டனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..