நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!! அமைச்சர் ஏ.வ. வேலு பேட்டி..!!
சென்னை ஜார்ஜ் கோட்டையில் நாளை 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நேற்று தொடங்கிய நிலையில் இன்றுடன் முடிவடைந்தது…
இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்… அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அப்போது அவர் பேசுகையில் “ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வது பொதுப்பணித்துறையிடும் ஒப்படைக்கப்படும். அந்த வகையில் பொதுப்பணித்துறை சார்பாக மூன்று அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1100 பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
நாளை சுதந்திர தினம் நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்த உள்ளார். அவர் எங்கு எப்பொழுது பேசினாலும் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பினை வெளியிடுவார்.. அதே போன்று நாளைக்கும் ஒரு அறிவிப்பு வெளியாகலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
அதைத்தொடர்ந்து பேசியவர் தமிழக அரசின் தகைசால் விருது பெரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் நாளை இந்த நிகழ்ச்சியின் பங்கேற்க உள்ளதால் அவர் உடல்நிலை மற்றும் வயது மூப்பு காரணமாக அவருக்கு தனியாக தானியங்கி மின் பழுதூக்கி தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாகவும் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு 15 அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.. அதை பற்றி அடுத்த கட்ட நடவடிக்கை ஏதேனும் மேற்கொள்ளப்படுமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு..?
நாளை 78வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில்.., கொடியேற்றம் முடிந்ததும் முதலமைச்சர் கட்டாயம் பேட்டி அளிப்பார்.. அதே சமயம் திமுகவை பொறுத்தவரையில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைந்து முடிக்கப்படுமே தவிர மாற்றிபேசும் செயல் திமுகவிற்கு கிடையாது என பதில் அளித்தார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..