இடியமின்னின் அடுத்த அப்டேட்..!! சில மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 19 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை முதல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், கரு மேகம் சூழ கனமழை பெய்து வருகிறது, சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
மேலும், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர், ராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று இரவு வரை 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.