ஆர்டர் செய்தது “மட்டன் பிரியாணி” ஆனா டெலிவரி பாய் கொடுத்தது..!
பெருங்களத்தூர் காமதேனு பகுதியை சேர்ந்த சுரேஷ், மதிய உணவு வேலையில் ஸ்டார் பிரியாணி கடையில் “Swiggy” மூலம் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்யும் பொழுது 30 நிமிடம் என காட்டியுள்ளது, ஆனால் ஒரு மணி நேரத்திற்கு பின்னரே உணவு டெலிவரி வந்துள்ளது.
பிரியாணி பார்சல் வரும் பொழுது டாக் ஒட்டப்படாமல், பிரியாணி டப்பாவின் மூடி திறந்துள்ளது. மேலும் பிரியாணியில் பீசும் இல்லை, பிரியாணியின் அளவும் குறைவாகவே இருந்துள்ளது. இதை பார்த்து சந்தேகம் அடைந்த சுரேஷ் ஸ்பூன் மூலம் ஆய்வு செய்துள்ளார், அப்போது அது ஊழியர் சாப்பிட்டு வைத்த எச்சில் பிரியாணி என கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக ஸ்டார் பிரியாணி கடையை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது நாங்கள் பீஸுடன் தான் கொடுத்தோம், என சொல்லி அதற்கான சிசிடிவி காட்சியையும் சுரேஷ் செல்போனிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின் ஸ்விக்கி ஊழியர் முத்து குமாரை தொடர்பு கொண்டு பேசிய போது, ஆமா நான் தான் சாப்பிட்டேன் இப்போ அதுக்கு என்ன..? உன்னால ஒன்னும் பண்ண முடியாது, வேணும்னா மேனேஜர் கிட்ட சொல்லு அவன் வாங்கிட்டு வந்து தருவான் என நக்கலாக சொல்ல, வேதனை அடைந்த சுரேஷ் பீர்க்கன் காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Discussion about this post