இலாக்கா இல்லாத அமைச்சர் பதவிக்கும் சிக்கலா..? செந்தில் பாலாஜி வழக்கிற்கு இன்று தீர்ப்பு..!!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.. எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதைப்போல் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக நியமனம் செய்த உத்தரவை எதிர்த்து, செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்கு தொடுத்தார்.
இந்த அனைத்து வழக்குகளின் விசாரணையும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் நடைபெற்றது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞ்சர் சண்முக சுந்தரம், அரசியல் சட்ட பிரிவுகளையும் உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசன தீர்ப்புகளையும் எடுத்துக்காட்டி குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டாரே தவிர “ஒருவர் அமைச்சராக எந்த தகுதியும் இல்லை” என கூறியுள்ளார்.
மேலும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக பதவி நீடிக்க எந்த சட்டமோ, சட்ட விதிகளோ ஒரு தடையில்லை உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளதாக கூறி வாதத்தை தொடங்கினார்.
எம்.எல்.ரவி தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், . அமைச்சரவை ஆலோசனை படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றாலும், சில விதிவிலக்குகள் உள்ளது. அதுபோன்ற சூழல் நிலவுகிறதா இல்லையா என பார்க்க வேண்டும்” என பதில் வாதத்தை முன்வைத்தார்.
ஜெயவரதன் தலைப்பில் பதில் வாதம் செய்த மூத்த வழக்கறிஞ்சர் “ராகவாச்சாரி” கண் முன்னே நடக்கும் குற்றங்களை பாத்துக்கொண்டு அமைதியாக இருப்பவர், ஆளுநராகவே இருக்க முடியாது.., இது குறித்து பேசிய ஆளுநர் இலாக்கா இல்லாத அமைச்சாராக செந்தில் பாலாஜி இருப்பததை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. என ஆளுநர் ரவி தெரிவித்தார்.
இந்த வழக்கில் வாதங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 4ம் தேதி வழக்கிற்கு தீர்ப்பு என அறிவித்த நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்டது, இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு இன்று முடிவிற்கு வந்தது.
Discussion about this post