முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு உளவுதுறை செயலிழந்து இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி யை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பில் அதிமுக வின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர் இந்த சந்திப்பில் ஆளுநரிடம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலையை குறித்து புகார்தெரிவித்ததாக தகவல் வெளியாகியது. இதையடுத்து ஆளுநருடனானா சந்திப்பை நிறைவு செய்த பின்னர் செய்தியாளர்களை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர், தமிழ்நாட்டின் உளவுத்துறை செயலிழந்து உள்ளது என்றும் கோவை சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியான முறையில் கையாளுவதில் தவறிவிட்டது மேலும் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் அடைந்த வழக்கை காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.