கார்த்திகை மாத அமாவாசையை ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அங்கு பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் புனித தீர்த்தம் ஆடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது.
தமிழகத்தின் பிரபலமான கோவில்களில் ஒன்றான ராமேஸ்வர ராமநாத சுவாமி கோவில். வேண்டுதலுக்காக காசி செல்லும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அமாவாசை அன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு சமர்ப்பணம் செய்வது வழக்கம். இதனை தொடர்ந்து கார்த்திகை மாத அமாவாசை என்பதால் அக்னி தீர்த்த கரையில் பல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால ராமேஸ்வரம் கோவிலில் மக்களின் கூட்டம் அதிகமா இருந்தது.