தற்போதய காலகட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் என்பது வந்துவிட்டது. இது அத்தியாவசிய ஒன்றாகவும் மாறிவிட்டது. தொழிற்நுட்பம் வளரும் வேகத்தில் அதில் இருக்கும் ஆபத்துகளும் வேகமாகா வளர்கிறது. பல திருட்டுகள் மற்றும் அங்கீகரிக்க படத்தை செயலிகள் மூலம் பெரும் லோனால் வரும் பிரச்சனைகளால் பல தற்கொலைகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில்தான் வாட்ஸ் அப் செயலியில் கால்பந்து உலகக்கோப்பை தொடரை காண 50 ஜிபி இலவச டேட்டா அளிக்கப்படுகிறது என்று ஒரு பொய்யான தகவல் பரவலாக பகிரபட்டு வருகிறது. இதனை பலரும் நம்பி தங்களின் தனிப்பட்ட தகவல்களை அந்த விண்ணப்பத்தில் பதிவேற்றி வருகின்றனர். இதனால் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறை கூறுகையில் , இவ்வாறு பரவும் செய்திகளை நம்பி யாரும் தங்களின் தனிப்பட்ட தகவல்களை பரப்புவதயும், அந்த மெசேஜின் மூலம் வரும் இணைப்பை க்ளிக் செய்வதையும் தவிர்க்க வேண்டும். ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் அந்த மெஸேஜிக்கு பதிலளித்தால் அவர்களின் போன் ஹேக் செய்யபட வாய்ப்புள்ளதாக காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.