நவராத்திரி 4ம் நாள் வழிபாடு…!! செல்வம் செழிக்க வைக்கும் மகாலட்சுமி வழிபாடு..!!
நவராத்திரி தொடங்கி இன்று நான்காவது நாள்., நவராத்திரி என்றாலே மிகவும் விசேஷம் என சொல்லலாம் அப்படியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பை பற்றி நவராத்திரி கூறுகிறது.. நவராத்திரி பிறந்ததன் புராண கதைகள் பற்றி முதலில் தெரிந்துக்கொள்ளலாம்..
மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்தாலும் அடிப்படை ஆதார சக்தி ஒன்றே. இந்த தெய்வங்கள் அனைத்தையும் நம் வீட்டிற்கே வரவழைத்து போற்றி வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி.
பலநூறு ஆண்டுகளுக்கு முன் சும்பன், நிசும்பன் ஆகிய இரண்டு அரசர்களை ஆதிபராசக்தி பல அவதாரங்கள் எடுத்து கொன்ற நாளையை நாம் நவராத்திரியாக கொண்டாடுகிறோம்.. என புராண கதைகளில் சொல்லப்பட்டுள்ளது..
நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்., அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள்.
நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி.
இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள்.
மூன்றாவது நாளுக்கு உரியவாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள்.
நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள்.
ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர்.
ஆறாவது நாளுக்குரிய தேவிவடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர… வழிபாடு செய்ய வேண்டும்..
அலை கடலில் இருந்து பிறந்த தாயார் ஆதலால், அலைமகள் என போற்றப்படுகிறாள். நவராத்திரியின் நான்காவது நாளில் மலைமகளை வழிபட்டு முடிந்து, மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்கிறோம். இந்த நான்காம் நாளில் அம்பிகையை மகாலட்சுமி வடிவத்திலேயே நாம் வழிபட வேண்டும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..