பானிபூரி வியாபாரியின் வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்கள்..! 30 சவரன் நகை கொள்ளை..!!
இராஜபாளையம் பகுதியில் பானி பூரி வியாபாரியின் வீட்டில் இருந்த 30 பவுன் தங்க நகை அரை கிலோ வெள்ளி மற்றும் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் இராஜபாளையம் பகுதியை சேர்ந்த அன்பு மனைவி பவளக்கொடி இவருக்கு தென்னரசு (37) மற்றும் அர்ஜுனன் (35) இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன இதில் தென்னரசு பாண்டிச்சேரியில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார் இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பானி பூரிக்கு தேவையான மசாலாக்களை வீட்டில் அரைத்துக் கொண்டு வீட்டை பூட்டிவிட்டு அவருடைய தாயாரான பவளக்கொடியிடம் சாவியை கொடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் பவளக்கொடி தனது இரண்டாவது மகனான அர்ஜுனன் என்பவர் வீட்டில் வசித்து வருகிறார் அவ்வப்போது தென்னரசு வீட்டிற்கு வந்து வீட்டை சுத்தம் செய்வதும் இரவு நேரங்களில் லைட் போட்டுவிட்டு திரும்பும் செல்வது வழக்கம் அதனைத் தொடர்ந்து இன்று வழக்கம் போல் வீட்டிற்கு வந்த பவளக்கொடி வீட்டின் முன் கேட் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவருடைய இரண்டாவது மகனான அர்ஜுனனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் அர்ஜுனன் வந்து பார்த்தபோது முன் கேட் உடைக்கப்பட்டிருந்ததும் அதேபோல் உள் கதவையும் கடப்பாறையால் நெம்பி உடைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது இதுகுறித்து பாண்டிச்சேரியில் இருந்த தென்னரசுக்கு தகவல் தெரிவித்தனர் உடனே விரைந்து வந்த தென்னரசு வீட்டில் இருந்த பீரோவை பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் தங்க நகை அரை கிலோ வெள்ளி மற்றும் 80, ஆயிரம் ரொக்கம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருட்டி சென்றது தெரிய வந்தது.
இந்த சம்பவ குறித்து குரிச்சிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தென்னரசு பாண்டிச்சேரியில் வேலை செய்வதை அறிந்து அக்கம்பக்கத்தினரே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனரா அல்லது வேறேனும் மர்ம நபர்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..