பள்ளி மாணவன் பையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர்..!!
சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் நிலைதடுமாறி டெஸ்க்கின் மேல் விழுந்துள்ளான்.., இதனால் பதற்றம் அடைந்த வகுப்பு ஆசிரியர் தண்ணீர் தெளித்து எழுப்பியுள்ளனர். ஆனால் மாணவன் போதையில் பேசியுள்ளான்..
அதனை உணர்ந்த ஆசிரியர்., தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துள்ளார்., பின் தலைமை ஆசிரியர் மாணவனின் பையை சோதனை செய்த போது 50 கிராம் கஞ்சா இருப்பதை கண்டு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. பின்னர் இது குறித்து பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் தலைமை ஆசிரியர் புகார் அளித்துள்ளார்.. புகாரின் பேரில் அப்பள்ளிக்கு வந்த போலீசார் மாணவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது பழவந்தாங்கல் இரயில் நிலையம் அருகே ஒரு நபர் கஞ்சா விற்பனை செய்வதும் அவரிடம் இருந்து வாங்கியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளான். அதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோரை வரவழைத்த போலீசார், மாணவனுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும் மாணவன் சொன்ன தகவலின் படி கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் தேடி சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.. சென்னை நகர் பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி மாணவன் ஒருவர் பள்ளிக்குக் கஞ்சா கொண்டு வந்துள்ள சம்பவம் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..