மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி முத்தமிழ் தேருக்கு மலர் தூவி வரவேற்பு !!!
மயிலாடுதுறைக்கு வருகை தந்த கலைஞரின் பேனா வடிவிலான முத்தமிழ் தேருக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் மாணவ மாணவிகள் மலர்தூவி உற்சாகமா வரவேற்றனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் எழுத்தாளர் –கலைஞர் குழுவின் சார்பில், கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டிற்கு ஆற்றிய பணிகளை போற்றும் வகையிலும், இளம் தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் வகையிலும், “முத்தமிழ்த்தேர்” – அலங்கார ஊர்தி பயணம் கடந்த நான்காம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த முத்தமிழ்தேர் வாகன ஊர்தி மயிலாடுதுறைக்கு வருகை தந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.