கழுகுமலை, கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி விழா
தூத்துக்குடி மாவட்டம் தென் பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை, கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் 5-ம் நாளில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ளது கழுகுமலையில் கந்த சஷ்டி விழா கடந்த 13ம் தேதி தொடங்கியது.
இவ்விழாவின் 5-வது நாளாக தாரகாசூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, சுவாமிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
