ADVERTISEMENT
ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தில் புதிய இந்தியன் வங்கி கிளையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தில் புதிய இந்தியன் வங்கி கிளையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலைகிராமத்தில் சுமார் 10 மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கிராம மக்கள் பலர் வங்கி சேவைக்களுக்காக 10 கிலோ மீட்டர் தூரம் நகருக்கு வரும் நிலையில், நாயக்கனேரி மலைகிராமத்தில் தேசியமையமாக்கப்கப்பட்ட இந்தியன் வங்கியின் புதிய கிளையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வங்கி நிர்வாகிகள் மற்றும் மலைகிராம மக்கள் பலர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நாயக்கனேரி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்து பின்னர் அப்பகுதியில் உள்ள பள்ளிகளிலும், ஊரக வளர்ச்சி துறை சார்பில், மலைகிராமத்தில் மேற்க்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்க்கொண்டார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.