திருத்தணியில் வள்ளி தெய்வானையுடன் காட்சி கொடுக்கும் முருகர்..!! பல மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள்..!!
சிவ பெருமானின் நெற்றி கண்ணில் இருந்து மற்றொரு அவதாரமாக முருகர் பிறந்தார். அவரை பாதுகாப்பதற்காக ஆறு பெண்கள் இருந்தனர்.., அவர்களை கார்த்திகை பெண்கள் என்று தான் அழைபார்க்கலாம்.
முருகரும் கார்த்திகை பெண்கள் மீது அதிக அன்போடு இருந்துள்ளார். முருகரை கார்த்திகை பெண்கள் பத்திரமாக பார்த்துக்கொண்டதால் சிவ பெருமான் அவர்கள் முன் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்கு கார்த்திகை பெண்கள்.., நாங்கள் எப்பொழுதும் இதே மாதிரி முருகருக்கு அடியாளாக இருந்து சேவை செய்தால் போதும் என கேட்டுள்ளனர். சிவ பெருமானும் அவர்களின் ஆசைக்கு இணங்க என் மகனை நீங்கள் கவனித்து கொண்டதால் உங்களையும் இனி மக்கள் வணங்குவார்கள்.
இன்று முதல் நீங்கள் கார்த்திகை பெண்களாக முருகருடன் இருப்பீர்கள்.., உங்களை போற்றும் விதமாக கிருத்திகை என்ற நாள் வழிபாடு நாளாக அவகரிக்கப்படும் என்ற வரத்தை.., கார்த்திகை பெண்களுக்கு அளிக்கிறார். எனவே தான் இன்றை நாள் கிருத்திகையாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
முருகரின் ஆறாவது படை வீடான “திருத்தணி” முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.., மேல் திருத்தணியில் உள்ள நல்லாங் குளத்தில் புனித நீராடி விட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
இந்த திருத்தலத்தில் முருகர் வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஏராளமான பக்தர்கள் முருகருக்கு பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து பால் காவடி.., பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தியுள்ளனர்.
இன்று ஆடி கிருத்திகை அன்று முருகரை தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, கர்நாடக மற்றும் புதுச்சேரியில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவதால் கூடுதல் போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.
Discussion about this post