நில அளவையர் மீது தாக்குதலா..??
ராணிப்பேட்டை மாவட்டம் நில அளவையர் மீது தாக்குதல் நடத்திய நபரின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் பொன்னம்பலம் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தஞ்சை மாவட்டம் பெரியகோட்டை கிராமத்தில் நில அளவை பணி மேற்கொண்ட நில அளவையர் பவ்யாவை தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாக தாக்கிய முருகானந்தன் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.