ADVERTISEMENT
கொடைக்கானலில் ஜக்கரண்டா பார்க்க குவியும் சுற்றுலா பயணிகள்..!!
கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்கும் ஜக்கரண்டா மலர்களை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கால நிலைக்கு ஏற்ப பல்வேறு வகையிலான மலர்கள் பூத்து குலுங்கும்.
இந்த நிலையில் கோடை காலங்களில் மட்டுமே பூக்கக்கூடிய ஜக்கரண்டா மலர்கள் தற்போது, பூக்கத் தொடங்கியுள்ளன.
ஜக்கரண்டா மிமோசி போலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லாவண்டர் நீல நிற பூக்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் பூத்துள்ளன. குறிப்பாக பெருமாள்மலை சாலையில் அதிக அளவில் பூத்துள்ளது .
இந்த ஜக்கரண்டா மலர்கள் மரங்களில் மட்டுமே பூக்கக்கூடிய வகையைச் சேர்ந்தது. கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக இந்த மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இதனை காண்பதற்காக ஏராளாமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து பூக்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.