பிரித்வி ஷா-விற்கு பாடம் புகட்டிய மும்பை அணி..!!
மும்பை அணியில் இருந்து பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரித்வி ஷாவை கிரிக்கெட் கமிட்டி அணியில் இருந்து நீக்கியுள்ளது..
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கிரிக்கெட் வீரரும் தற்போதைய மும்பை அணியில் ஆட்டக்காரராக இருந்த பிரித்வி ஷா அணியில் இருந்து நீக்கம் செய்யப்படுள்ளார்..
அவரை நீக்கம் செய்வதற்கான காரணம் குறித்து கிரிக்கெட் கமிட்டி தெரிவித்துள்ளது.,
அதாவது பிரித்விஷா-வின் உடல் எடை மற்றும் பயிற்சி போட்டிகளில் சரியாக பங்கேற்காதது பயிற்சியாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது…
மேலும் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சஞ்சய் பாட்டீல், ரவி தாக்கர், ஜீத்தேந்தர தாக்கரே, கிரன் பவார், விக்ராந்த் எலிகேட்டி ஆகியோர் கொண்ட குழு பிரித்வி ஷாவை ரஞ்சி கோப்பையில் கடைசியில் போட்டியில் இருந்து நீக்க கமிட்டி முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாக்கியுள்ளது.. .
இந்த முடிவுகளை மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தினர் எடுத்திருப்பதாகவும்., போட்டியில் ஆர்வம் காட்டாமல், அலட்சியம் காட்டியதால் பிரித்வி ஷாவை நீக்கி அவருக்கு பாடம் கற்பிக்க மும்பை அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது..
மேலும் பிரித்வி ஷாவை அணியில் இருந்து நீக்குவது நிர்வாகம் மற்றும் அணித் தேர்வர்களின் கோரிக்கை மட்டுமின்றி. பயிற்சியாளர் மற்றும் அணியின் கேப்டனும் சேர்ந்து பிரித்வி ஷாவை அணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது…