உலகின் வினோதமான உணவு சடங்குகள்..!
உணவு என்பது மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். உணவு என்ற ஒன்று இல்லாமல் உலகில் எந்தவொரு உயிரினமும் வாழவே முடியாது. எல்லா நாடுகளிலும் அந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப உணவு பழக்கங்கள் பின்பற்றப்படுகிறது. அவற்றில் சில வினோதமான சடங்குகள் அங்குள்ள பழங்குடியினரால் பின்பற்றப்படுகிறது அவற்றை பற்றி பார்க்கலாம் வாங்க.
மாட்டு ரத்தம் குடிக்கும் மாசாய் பழங்குடியினர்:
ஆப்பிரிக்காவில் தெற்கு கென்யா மற்றும் வடக்கு தான்சான்யா பகுதியில் வசிக்கும் மாசாய் பழங்குடியின மக்கள் அவர்களின் திருமணத்தின் போது பசுவின் ரத்தத்தை பாலில் கலந்து சமைத்து சாப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது.
ஹாரே ஒயின் திருவிழா:
ஸ்பெயினில் ஹாரேவில் ஆண்டுதோறும் இந்த ஒயின் திருவிழா கோடைக்காலத்தில் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் அனைவரும் பாத்திரம் மற்றும் பாட்டிலில் ஒயின் ஊற்றி மற்றவர்கள் மீது ஊற்றி மகிழ்வார்கள்.
இறந்தவர்களுடன் விருந்து உண்ணுதல்:
இந்தோனேசியாயில் டோராஜன்ஸ் பழங்குடியின மக்கள் இறந்த உடலுடன் உணவளிக்கும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள், மேலும் இறுதிச்சடங்கு முடிந்தும் சில மாதங்களுக்கு இறந்த உடலுடன் உணவருந்தும் வழக்கம் உள்ளது.
மேஜிக் காளான் சிறுநீர்:
வடக்கு ரஷ்யா பகுதியில் வசிக்கும் கோரியக்ஸ் பழங்குடியின மக்கள் கலைமான்கள் மற்றும் போதை காளான்களை உண்ணும் வழக்கம் பெற்றிருக்கிறார்கள். மேலும் போதை காளானை உண்ணுபவர்களின் சிறுநீரை குடிக்கும் வழக்கமும் அங்கு உள்ளது.