ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க மதிமுக சார்பில் இயக்கம்..!!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வலியுறுத்தி தா.பழூரில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளதா .பழூர் கடை வீதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கம் செய்ய கோரி இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த கையெழுத்து இயக்கம் அரியலூர் மாவட்ட தலைவர் கு.சின்னப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் முதல் கையெழுத்தை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கிவைத்தார். அரியலூர் ஒன்றிய செயலாளர் சங்கர் ஒன்றிய தலைவர் சின்னதுரை, மாவட்ட பிரதி நிதி விஜயகுமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
மேலும் மாவட்ட செயலாளர் ராமநாதன் ஒன்றிய பொருளாளர் நாகராஜன் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கம் செய்ய கோரி கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்ட பிரதிநிதி “அறவழி” நன்றி கூறினார்