எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வது பாஜக விற்கு கடுப்பு..! முதல்வர் ஸ்டாலின் பேட்டி..!!
பாஜாகாவை வீழ்த்துவதற்காகவே எதிர்கட்சிகள் ஒன்று கூடி இருக்கிறோம் என முதகல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.., சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார், அதில் அவர் பேசியது.
இன்றும் நாளையும் பெங்களுருவில் நடக்க இருக்கும் கூட்டத்தில் 24 எதிர்கட்சிகள் பங்கேற்க உள்ளன. எதிர்கட்சிகளை திசை திருப்ப வேண்டும் என பாஜக தந்திரமாக செயல்பட்டு வருகிறது. எதிர் கட்சிகளின் கூட்டத்தை முடக்கவே அமலாக்கதுறையை வைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடுப்பாகும் பாஜக :
எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் ஒன்று கூடுவது பாஜகவிற்கு கடுப்பாக இருக்கிறது போல.., அந்த கடுப்பை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியாமல் பாஜக அமலாக்க துறையை வைத்து சோதனை செய்துள்ளது.., என முதலவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
அமலாக்கத்துறை சோதனை :
அமலாக்க துறை செய்யும் சோதனை பற்றி திமுகாவிற்கு கவலை இல்லை.., தொடர்ந்து 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி நடைபெற்ற வழக்கில் எந்த வித நடவடிக்கையும் இல்லை.., பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. அமைச்சர் பொன்முடி மீதான வழக்குகள், சோதனைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் என அனைத்தயும் அமைச்சர் பொன்முடி சட்ட ரீதியாக எதிர்கொள்வார்.
பெங்களூரு கூட்டம் :
வருங்கால இந்தியாவை ஆபத்தில் இருந்து மீட்கவே இந்த கூட்டம் நடைபெறுகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2024 தேர்தலில் பாஜக :
அமலாக்க பிரிவு சோதனைகளுக்கு எல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் தரபோகும் பதில் என்னவென்று அவர்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும்.., பாஜக வின் தந்திரங்கள் இனி செயல்படாது வடமாநிலங்களில் செய்த செயலை தற்போது தமிழ்நாட்டில் பாஜக செய்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கலைக்கும் நோக்கில் பாஜக சில செயல்களை செய்து வருகிறது. எதிர்கட்சிகள் நடத்தும் கூட்டத்தால் பாஜக கடுப்பாகி அமலாக்க துறையை ஏவி விட்டுள்ளது. என செய்தியாளர்கள் முன் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆளுநர் :
எங்களுக்காக ஆளுநர் தேர்தல் பிரச்சாரம் நடத்தி வருகிறார்., இப்போது அமலாக்க துறையும் சேர்ந்து நடத்தி வருகிறது.., பாஜக செய்யும் செயலால் தமிழ்நாட்டில் எங்களுக்கு வேலை சுலபமாக முடிந்து விடும். அமலாக்க துறையினர்.., செய்யும் சோதனை எங்களை திசை திருப்பும் நோக்கில் இருக்கிறது. அதை மக்களும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
காவிரி பிரச்சனை :
மேகதாதுவில் அணை கட்டவிடமாட்டோம் என்ற நிலைப்பாடு தெளிவாக தெரிகிறது.., என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் காவிரி பிரச்சனை கூட்டம் நடைபெற வில்லை என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியதுடன் மேற்கண்ட அனைத்தும் செய்தியாளர்கள் முன் பேசியுள்ளார்.
Discussion about this post