தாய் மார்களே உஷார் ..! குழந்தைகள் பால் குடிக்கும் பால் புட்டியில் ஆபத்து?
பொதுவாகவே பிறந்த குழந்தைகளுக்கு தாய் பால் கொடுப்பது வழக்கம். தாய் பாலில் சத்து அதிகம் இருப்பதால், ஒன்று முதல் இரண்டு வயது வரையாவது தாய் பால் கொடுப்பார்கள்.
ஒரு வயது வரையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். என மருத்துவர்களும் சொல்கின்றனர்.
நூற்றில் ஒருவர் தான் தாய் பாலிற்கு பதிலாக புட்டி பால் கொடுக்கின்றனர்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் என்று நாம் தரும் புட்டி பாலில் ஆபத்து என்றால், சற்று பயத்தை தான் கொடுக்கிறது.
அப்படி அதில் என்ன ஆபத்து என்று நீங்கள் சிந்திக்கலாம்.?
அதை பற்றி மு.ஜெயராஜ் லட்சுமி நாராயண மருத்துவக்கல்லூரி குழந்தைகள் நல மருத்துவர் கூறியுள்ளார்.
பால் புட்டியின் நிப்பிலில் உள்ள லப்பரை தயார் செய்ய 50 ஆண்டுக்கும் மேலாக பயன் படுத்தப்பட்ட. பிஸ்பினால் ஏ எனும் கெமிக்கல் உபயோகிக்கின்றனர்.
இதனால் வாய் புண் பாதிப்பு அதிகம் ஏற்பட்டதால். 2015ல் அதை தமிழக அரசு தடை செய்தது. மேலும் பிஸ்பினால் ஏ-யில் தயார் செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் தடை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
சில ஆய்விற்கு பின்னர் அதை தொடர்ந்து நடத்த சில நிர்வாகம் சான்றுதல் வழங்கி மீண்டும் தொடர்ந்து பால்புட்டிகள் தயார் செய்ய சில நிறுவனங்கள் ஆரமித்தது.
பிஸ்பினால் ஏ-வின் அளவை குறைத்து தயார் செய்தாலும். அதிலுள்ள நச்சு குழந்தையின் எடையை பாதிக்கும்.
மேலும் நீரிழிவு நோய், இதய நோய், மூளை வளர்ச்சி பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும்.
பிறகு எப்படி குழந்தைகளுக்கு பால் கொடுப்பது என்று நீங்கள் நினைக்கலாம். முடிந்த வரை லப்பர் நிப்பில் உள்ள பால் புட்டியை தவிர்க்கலாம், பிளாஸ்டிக் பால் புட்டி உபயோகித்தால் கூட ஒன்றுக்கு மூன்று முறை சுடுதண்ணீரில் சுத்தம் செய்து, பாலை கொடுக்கலாம்.
என அறிவுறுத்தினார் மருத்துவர் மு.ஜெயராஜ்.
Discussion about this post