அம்மாவும் நீயே அப்பாவும் நீயே.. ஓட்டுபோட்டு ஜெயிக்க வைக்கும் தெய்வமும் நீயே..!! பாஜக வெளியிட்ட லிஸ்ட்..!!
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 83 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 9 ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 25ம் தேதி இந்த தேர்தல் நடைபெறும் என தேர்தல் தேதியை மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக 51 ஆயிரத்து 756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 5 புள்ளி 25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 33 வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ராஜஸ்தானில் மட்டுமே தாமதமானது.
தற்போது ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 33 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெளியாகியுள்ளது. அதேபோன்று, ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 83 பேர் கொண்ட 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜகவும் வெளியிட்டுள்ளது.
இதில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஜலர்படான் தொகுதியிலும், சதீஷ் புனியா ஆம்பர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..