பெரியாரின் சிலைக்கு அமைச்சர் உதயநிதி மரியாதை..!!
பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி சேலத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் “ஈராயிரம் ஆண்டுகளாக சாத்திரம் – சம்பிரதாயமென மனிதனை மனிதனே இழிவு செய்த கொடுமைகளை உடைத்தெறிந்த ஈரோட்டு பூகம்பம்.
மானமும் – அறிவும் மனிதனுக்கு அழகு – சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என பகுத்தறிவு ஊட்டிய சமூக நீதி நாயகர், தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளில் அவர்களது பணிகளை போற்றுவோம்.
சமூக நீதி நாளான இன்று தமிழ்நாட்டை பண்படுத்திய பெரியாரின் கொள்கைகளை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்திற்கும் கொண்டு சேர்க்க அயராது உழைப்போம். வாழ்க பெரியார்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பெரியாரின் 145வது பிறந்தநாளை ஒட்டி சேலத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்
Discussion about this post