தந்தை பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை..!!
தந்தை பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, பெரியார் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட திமுக அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதில் ஏராளமான திமுகவினர் சமூக நீதி உறுதிமொழி ஏற்றனர்.
Discussion about this post