ஆவணப்பட இயக்குனரான ஒடிசா முதல்வரின் சகோதரி காலமானார்..!!
பிரபல சினிமா தயாரிப்பாளரான “கீதா மேத்தா” இன்று டெல்லியில் காலமானார். இவர் ஒடிசா முதல்வரின் சகோதரி, இவரின் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கின் சகோதரியுமான கீதா மேத்தா (வயது 80), இவர் குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வந்தார். வயது முதிர்வின் காரணமாக இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கீதா மேத்தா காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, அவரது சகோதரரான நவீன் பட்நாயக், ஒடிசா ஆளுநர் கணேஷி லால் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிறந்த எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குனரும், திரைப்படத் தயாரிப்பாளருமான கீதா மேத்தா, மாணவ பருவத்தில் இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்தார்.
உயர்கல்வி படிப்பை இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தார். பிரபலமான புத்தகங்களை எழுதிய கீதா மேத்தா, சில சினிமாக்களையும் தயாரித்துள்ளார். இவரது மறைவு திரைத்துறையினர் மட்டுமின்றி, அரசியல், இலக்கியம், மொழியியல், இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..