அமைச்சர் பொன் மூடி வீட்டில் சோதனை..!! பொது மக்களின் வாகனங்கள் செல்ல தடை..!! கூடுதல் போலீஸ் பாதுகாப்பு..!!
சென்னையில் அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவரின் சம்மந்தப் பட்ட அனைத்து இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், எனவே சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவரின் சம்மந்தபட்ட அனைத்து இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் பொன் முடியின் கார்களில் உள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்துள்ளனர், இந்நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை செய்யும் சோதனை, பாஜகவின் திட்டமிட்ட பழிவாங்கும் எண்ணம், என பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வர இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்திற்கு வருவோர் தீவிர கண்காணிப்புக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப் படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக 5 முதல் 7 காவலர்கள் வரை பாதுகாப்பு பணியில் இருப்பார்கள், தற்போது 15 முதல் 20 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.