அச்சரப்பாக்கம் மலை மாதா தளத்தில் கிறிஸ்துமஸ் குடில் திறப்பு விழா
அச்சரப்பாக்கம் மழை மலை மாதா அருள் தளத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துமஸ் குடில் திறப்பு விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மழை மலை மாதா அருள்தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவது வழக்கம் கிறிஸ்மஸ் விழாவின் தொடக்கமாக திருத்தல வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குடிலை தமிழக சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
