குழந்தையை பாதிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்..!!
மைக்ரோ பிளாஸ்டிக் ஆனது, நம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சுற்று சூழலுக்கும் சுற்றுப்புறங்களுக்கும் ஏற்றது, ஆரோக்கியத்தின் அச்சுறுத்தலாக மாறிவரும் இந்த பிளாஸ்டிக். பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ், உணவு பார்சல் செய்து தரப்படும் கவர் என அனைத்திலும் நிரம்பியுள்ளது.
இவை சில சமயம் தண்ணீரிலும் கலக்கின்றன இதனால் உடல் பருமன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கிறது.
* குழந்தைகளுக்கு பிளாஸ்டிக்கில் உணவு கொடுக்கும் பொழுது அவர்களின் உடல் வளர்ச்சியை தான் பெரிதும் பாதிக்கும்.
* மேலும் அதை அவர்கள் சுவாசிக்கும் பொழுது நோய் தொற்றை அதிகரிக்கிறது.
கர்ப்பகாலத்தில் இருந்தே இந்த மைக்ரோ பிளாஸ்டிக் குழந்தைகளுக்கு சில தாய்மார்கள் கொடுக்க தொடங்கி விடுகிறார்கள்.
* அதாவது கர்ப்பகாலத்தில் ஜூஸ் மற்றும் உணவுகளை பிளாஸ்ட்டிக் கவர், பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் எடுத்துக்கொள்ளும் பொழுது அது நேரடியாக குழந்தைக்கு சென்று விடும்.
* இந்த சமயத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகிப்பதை விட கண்ணாடி பாட்டிலில் தண்ணீர், ஜூஸ் குடிப்பது, வாழை இலையில் சாப்பிடுவது போன்றவற்றை செய்யலாம்.
* குழந்தைகள் அதிகம் விரும்பும் டாய்ஸ்களான பந்து, பொம்மைகள் போன்றவற்றை விளையாட கொடுப்பதற்கு பதிலாக, மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டு பொம்மைகளை கொடுக்கலாம்.
* குழந்தைகள் எதை எடுத்தாலும் வாயில் வைத்து, கடிக்கும் பழக்கம் இருக்கும். பிளாஸ்டிக் வகை பொம்மைகளை கடித்து விளையாடும் பொழுது அதன் நச்சு நேரடியாக வயிற்றுக்கு சென்று வாந்தி, மற்றும் வயிற்று வலி, வயிற்று போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும்.
* முக்கியமாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் புட்டிப்பால். ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு, தண்ணீர் அல்லது பால் கொடுக்க புட்டி பயன் படுத்துவது வழக்கம். குழந்தைக்கு ஆரோக்கியம் என்று புட்டியில் தண்ணீர் கொடுக்கும் பொழுது அவை நேரடியாக வயிற்று சென்று நோய் தொற்றை அதிகரித்து விடும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post