திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவியிடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் இன்று(மார்ச்.04) தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் போன்ற உள்ளாட்சி இடங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விவரங்களை திமுக தலைமை வெளியிட்டிருந்தது.
அதன்படி, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மேலும், 1 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத்தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யபட்டது.
இந்நிலையில்,திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவியிடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு எஸ்.சூரியகுமார்,
செங்கல்பட்டு மாவட்டம், நகராட்சி தலைவர் பதவிக்கு மாங்காடு சுமதி முருகன், நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கே.ஏ.எம் குணா (எ) குணசேகரன்,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஆர்.எஸ்.ரமேஷ், கரூர் மாவட்டம், குளித்தலை கே.கணேசன், பேரூராட்சி தலைவர் பதவிக்கு தென்காசி மாவட்டம், திருவேங்கடம் த.பாலமுருகன், தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை ரா.சரவணன், ஈரோடு மாவட்டம், சென்னசமுத்திரம் கு.பத்மா, பேரூராட்சி துணைத் தலைவர் திண்டுக்கல் மாவட்டம், பாளையம் வி.லதா, ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை லோ.சோமசுந்தரம், ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ச.துளசிமணி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர், என அதில் குறிப்பிட்டுள்ளார்.