உக்ரைன் அணுமின் நிலையத்தை சுற்றி வளைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 9வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், இந்த போரில் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் எனர்ஹோடா பகுதியில் ஐரோப்பியாவிலேயே மிகப்பெரிய அனல்மின் நிலையம் உள்ளது. ஸபோரிச்ஸியா என்பிபி என்று அழைக்கப்படும் 6 உலைகளை கொண்ட இந்த அணுமின் நிலையத்தை தவிர்க்க ரஷ்ய படைகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, அணுமின் நிலையத்தை சுற்றி வளைத்த ரஷ்ய படைகள், அதிதீவிர தாக்குதல் நடத்தினர். இதில் ஸபோரிச்ஸியா அணுமின் நிலைய கட்டிடத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. அனைத்து திசைகளில் இருந்தும் அணுமின் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்ப்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அணுமின் நிலைய உலை வெடித்தால் 1986ல் செர்னோபினில் ஏற்பட்ட பேரழிவை விட 10 மடங்கு அதிக அழிவுகளை உக்ரைன் சந்திக்க நேரிடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அணுமின் நிலையத்தில் பற்றிய தீ உரிய நேரத்தில் அணைத்து பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக உக்ரைன் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.