மாம்பழம் முகத்திற்கு இவ்ளோ பண்ணுதா.!! ஆச்சரியமா இருக்கே..!
மாம்பழம் கோடைக்காலத்தில் எளிதாக கிடைக்கும் பழங்களில் ஒன்று. அப்படி எளிதாக கிடைக்கும் மாம்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாப்பிட ரொம்ப பிடிக்கும். மாம்பழம் சாப்பிட மட்டும் இல்லாமல் நம்முடைய சருமத்திற்கும் நன்மை அளிக்கக்கூடியது.
* நல்லா பழுத்த மாம்பழத்தை எடுத்து அதன் தோல் நீக்கி கூழாக்கிக் கொள்ள வேண்டும். அக்கூழுடன் கொஞ்சம் தயிர், தேன் ஊற்றி நன்றாக கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தை அலசினால் முகத்தில் உள்ள முகப்பருக்கள் மறையும்.
* தயாரித்து வைத்துள்ள மாம்பழக் கூழ், தேன், அரிசி மாவு, பால் ஆகியவற்றை கலந்து அனைத்தையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி ஒரு 20 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவர சருமத்தில் மறைந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சி அடைய வைக்கும்.
* மாம்பழக் கூழ், கோதுமை மாவு, தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் காணப்படும். முகத்தில் ரொம்ப நாளாக இருக்கும் கரும்புள்ளிகள் கூட மறையும்.
* முகத்தில் ஏற்ப்படும் தோல் சுருக்கத்தை போக்க, மாம்பழக் கூழ், அவகேடோ கூழ், தேன் ஆகிய அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து காய்ந்ததும் முகத்தை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி வர தோல் சுருக்கத்தை தடுக்கலாம்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.