தாய்ப்பால் சுரப்பதை அதிகமாக்க இதோ எளிய வழிகள்..!!
* தாய்ப்பாலில் 90 சதவீதம் நீர் உள்ளது. தாய்ப்பாலை கொடுக்கும் தாய்மார்கள் தோராயமாக 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் அல்லது பழக்கூழை குடிக்க வேண்டும்.
* தாய்ப்பால் சுரப்பியை அதிகமாக்க இயற்கை காய்கறிகள், முட்டை, பால், பூண்டு, வெங்காயம், திராட்சை சாறு, கோழி மற்றும் இறைச்சி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும்.
* வெந்தயம், பெருஞ்சீரகம், பூண்டு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பி அதிகரிக்கும்.
* குழந்தை தூங்கும் சமையத்தில் தாயும் சேர்ந்து உறங்கி விட வேண்டும் ஏனெனில் தாய்ப்பால் தருபவர்கள் நன்றாக ஓய்வெடுப்பது மிகவும் அவசியமானது.
* தாயின் மார்பகங்களில் எப்போதும் பால் சுரக்கும். குழந்தைக்கு பாலூட்டும்போது சமையத்தில் மார்பகங்களில் மேலும் தாய்ப்பால் அதிகரிக்கும்.
* குழந்தை பிறந்த உடனே தாயின் மார்பகமான ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது 10 நிமிடம் குழந்தைக்கு பால் குடுக்க வேண்டும்.
* பிறந்த குழந்தை எப்போதும் தூங்கிக்கொண்டு தான் இருக்கும் அதற்காக பால் தராமல் விட்டுவிடக் கூடாது. குழந்தை தூங்கிக் கொண்டிருந்தாலும் மெதுவாக எழுப்பி பால் தர வேண்டும்.
* தாய்ப்பால் தரும் பெண்கள் ஒப்பனை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், காரணம் அதில் உள்ள இரசாயணங்கள் வீரியமாக இருந்தால் அது தாய்ப்பாலை தாக்கக் கூடியது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.