மம்தா கண்டன பேரணி..!! சக மருத்துவர்கள் முன் வைத்த கோரிக்கை..!!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து.. அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று கண்டன பேரணி நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் “ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்” கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து தலை., கை கால்களில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில், நீதி கேட்டு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். பின் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த “சஞ்சய் ராய்” என்பவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மாநில காவல்துறையினரிடம் சிபிஐக்கு மாற்ற வேண்டுமென உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கொல்கத்தா போலீசிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டார்.
இருப்பினும் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் உள்ள மவுலாலியில் இருந்து டோரினா கிராசிங் வரை கண்டன பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்., மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதில் அவர்கள் முன்வைத்த கோரிக்கையாவது “மருத்துவரை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு” மரண தண்டனை விதிக்க வேண்டுமென கோரி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
அதே போல் மம்தா பானர்ஜி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி 40 பேர் கொண்ட குழு மருத்துவமனைக்குள் நுழைந்து அவசர சிகிச்சைப் பிரிவு, மருத்துவப் பிரிவு மற்றும் மருந்து விநியோகிக்கும் பிரிவு ஆகியவற்றைச் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் சிசிடிவி கேமராக்களையும் உடைத்துள்ளனர்.
மேலும் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்தையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது.. இந்த தாக்குதலில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்..,
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து கொல்கத்தா தலைமை நீதிபதி டிஎஸ் சிவஞானம், நீதிபதி ஹிண்மய் பட்டாச்சார்யா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணை தொடங்கியது.
அப்போது, “மருத்துவமனையில் புகுந்த கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பது அரசு இயந்திரத்தின் முழுமையான தோல்வி., அங்குள்ள நிலைமை குறித்து போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவமனையில் 7,000 பேர் திரண்டது குறித்து உளவுத்துறைக்கு தகவல் இல்லை என்பதை நம்புவது கடினம்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்..
மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு :
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் இன்று காலை 6 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
மருத்துவரின் படுகொலை குறித்து அவரது பெற்றோர் அதே மருத்துவமனையில் பனி புரியும் சிலரின் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.. அவர்கள் மீது சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்., பெற்றோர்களின் புகார் ஏற்கப்பட வேண்டுமெனவும் சக மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..