கான்பூர் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து..! விபத்திற்கான காரணம்..?
உத்தரப்பிரதேசம் மாநிலமத்தில் இருந்து வாரணாசியில் அகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்திற்குள்ளானது
உத்தரப்பிரதேசம் மாநிலமத்தில் இருந்து வாரணாசியில் அகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எண் 19168, இன்று அதிகாலை 3மணி அளவில் கான்பூர் அடுத்த பீம்சென் இரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு தடுப்பு பிரிவில் தடம் புரண்டு விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்து இரயில் இன்ஜினியர் கூறுவது என்னவென்றால்., சபர்மதி எக்ஸ்பிரஸ் பாறாங்கல் மீது இன்ஜின் மோதியதால் இன்ஜினின் கால்நடை பாதுகாப்பு மோசமாக சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது..
இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக எந்த ஒரு உயிர் சேதமோ., பொருள் சேதமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த இரயில்வே அதிகாரிகள் தற்போது, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த அனைவரும் விபத்து நடந்த இடத்தில் இருந்து கான்பூர் ரயில்வேக்கு பேருந்தில் அழைத்து வரப்பட்டுனர்.
மேலும் ரயில் விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவதாவது., “தண்டவாளத்தின் குறுக்கே இருந்த அடையாளம் தெரியாத பொருளின் மீது ரயில் மோதி, இன்று அதிகாலை தடம் புரண்டுள்ளது.
பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். IB மற்றும் உபி போலீசார் விசாரணை பணியில் ஈடுபட்டுள்ளனர்” என ரயில்வே அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..